பால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்

 
 
1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி நானிருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். சில குஜராத்தி இளைஞர்கள் அவரைவழியனுப்ப வந்திருந்தனர். அவர்கள்  அந்த சன்யாசியை எனக்கு முறைப்படிஅறிமுகப்படுத்திய பின் பூனாவில் என் வீட்டில் தங்கியிருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். நாங்கள் பூனாவை அடைந்தோம். அந்த சன்யாசி என்னுடன் எட்டுஅல்லது பத்து நாட்கள் தங்கியிருந்த அவர் அடிக்கடி அத்வைதம் பற்றியும் வேதாந்தம்பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். சமூகத்தினருடன்கலந்து பழகுவதை அவர் தவிர்த்தார். அவரிடம்ஒரு சிறிதும் பணமிருக்கவில்லை. ஒருமான் தோல், ஒன்று அல்லது இரண்டு உடைகள், ஒரு கமண்டலம் – இவையே அவர் கொண்டிருந்தவை. பயணங்களின் போது யாராவது அவர்செல்லுமிடத்திற்கான பயணச்சீட்டை அளிப்பார்கள்.
 
ஸ்வாமிஜிஒரு முறை மஹாராஷ்ட்ரத்திலுள்ள பெண்கள் பர்தா முறையைப் பின்பற்றுவதில்லை என்பதில்மிகுந்த நம்பிக்கையைத் தெரிவித்தார். உயர் வகுப்பைச் சார்ந்த ஒரு சில மாதர்கள் முன்னாளைய புத்த பிட்சுக்கள் போலதங்கள் வாழ்க்கையை ஆன்மிகம், மதம்ஆகியனவற்றைப் பரப்புவதில் கழித்திருக்க வாய்ப்புண்டு. என்னைப் போலவே அவரும் ஸ்ரீமத் பகவத் கீதை யாருக்கும் துறவை போதிக்கவில்லைஎன்றும் மாறாக செயலில் பற்றற்று, அதனால்விளையும் பலனில் ஆசையற்று செயல் மட்டுமே புரியுமாறு உந்துவதாய்த் தான் நம்பினார்.
 
நான் அப்போது ஹீராபாக்கிலுள்ள டெக்கான் க்ளப்பில் உறுப்பினராய் இருந்தேன். அவர்களுடைய  வழக்கமான வாராந்திரசந்திப்புகள் ஒன்றில் ஸ்வாமிஜியும் என்னுடன் கலந்து கொண்டார். அன்றைய மாலைப் பொழுதில் அமரர் காசிநாத் கோவிந்த் நாத் தத்துவம் பற்றி ஒருசிறந்த உரையாற்றினார். யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஸ்வாமிஜி எழுந்து அவர் பேசியதின் மற்றைய ஓர் பரிமாணத்தை வெகுதெளிவாகவும் மணிப் பிரவாள ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தார். அங்கிருந்த அனைவரும் ஸ்வாமிஜியின் ஆற்றலில் வெகுவாய் கவரப்பட்டனர். அவர் சீக்கிரமே பின் பூனாவைவிட்டுச் சென்று விட்டார்.
 
இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பின் உலக சமய மாநாட்டிலும் பின்இங்கிலாந்து, அமெரிக்காவிலும் அதி மகத்தான வெற்றி பெற்றுஸ்வாமி விவேகானந்தர் தாய்நாடு திரும்பினார். ஒரு சிலசெய்தித்தாள்களில் அவரைக் கண்டு “இவர் என்னுடன்பூனாவில் தங்கிய அதே ஸ்வாமி தானோ?” என்று எண்ணிஅதை அவரிடமே கேட்டும் கல்கத்தா செல்லும் சமயம் பூனாவிற்கும் வருகை தருமாறும்வேண்டிக் கடிதமொன்று எழுதினேன். அதற்கு உணர்ச்சி பூர்வமான பதிலொன்றைஎழுதிய அவர் அந்த சன்யாசி தாமே என்றும் தற்போது பூனாவிற்கு வருகை தர இயலாமைக்குவருத்தமும் தெரிவித்திருந்தார். அந்தக்கடிதத்தைக் காணவில்லை. அது  கேசரி ப்ராசிக்யூஷனிற்குப் பிறகு (1897)  மற்றைய பொது மற்றும் தனிப்பட்ட பலவற்றுடன் அழிந்து போயிருக்கக் கூடும்.
 
இதற்குப்பிறகு ஒரு முறை கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்குபெறச் சென்றிருந்தசமயத்தில் சில நண்பர்களுடன் ராமகிருஷ்ண மிஷனின் பேலூர் மடத்திற்குச்சென்றிருந்தேன். எங்களை ஸ்வாமிஜிமிகுந்த வாஞ்சையுடன் வரவேற்றார். நாங்கள்தேநீர் அருந்தினோம். பேசிக்கொண்டிருக்கையில்ஸ்வாமிஜி நகைச்சுவையாக என்னை துறவறம் மேற்கொண்டு தன்னுடைய பணிகளை பெங்காலில்தொடருமாறும் தான் அதை மஹாராஷ்ட்ரத்தில் தொடருவாரென்றும் கூறி…”யாருக்கும் வெளி மாநிலங்களில்தங்களுக்குக் கிடைக்கும் செல்வாக்குத் தன் சொந்த மாநிலத்தில் கிடைப்பதில்லைஎன்றார்
 
~ நன்றி, வேதாந்த கேசரி, ஜனவரி 1934
From TheReminiscences of Swami Vivekananda
தமிழாக்கம் –  GnanaBoomi.com

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் கண்ட ஆன்மிகக் காட்சி

நான் என் மனதை எதிலும் செலுத்தாமல் நிலையாக நிறுத்தி வைத்திருக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்பு அலையாக பாய்வதை உணர்ந்திருக்கிறேன். அதன் விளைவாக  தியானம் செய்து முடித்து வெகு நேரம் ஆன பின்னும் ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே தோன்றும். இதனால் என் இருக்கையை விட்டு உடனே எழுந்து செல்லத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருப்பேன். இப்படி ஒரு நாள் தியானத்தில் இருக்கையில் ஓர் அதியற்புதமான தோற்றத்துடன் நானிருந்த அறையை வெளிச்சத்தில் மூழ்கடிப்பதான ஒளியுடன் ஒரு துறவி – எங்கிருந்து வந்தாரோ தெரியாது –  என்னிலிருந்து சிறிது தொலைவில் தோன்றினார். 
காவி வஸ்திரமும் கமண்டலமும் தரித்திருந்த அவருடைய முகத்தில் அப்படி ஒரு சாந்தமும் மனதை உள்நோக்கிய தெய்வீகக் களையும் உலக பேதங்களில்லாத வகையிலும் கூடிய தேஜஸ் ஒளிர்ந்தது. அந்த முகம் என்னை வசீகரிப்பதாயும் ஆகர்ஷிப்பதாயும் தோன்றியது. அவர் என்னை கூர்ந்து நோக்கிய வண்ணம் ஏதோ சொல்ல விரும்புபவர் போல மெள்ள என்னை நோக்கி அடியெடுத்து வைத்து வந்தார். ஆனால் நான் ஒரு சொல்லவொண்ணா அச்சத்தில் பீடிக்கப் பட்டு, இருக்கையை விட்டு எழுந்து வேகமாய்க் கதவைத் திறந்து வெளியேறி விட்டேன். ஆனால் மறுகணமே “ஏன் இந்த முட்டாள் தனமான பயம்?” என்று கேட்டுக்கொண்டு தைரியமடைந்து அந்தத் துறவி என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்பதற்காக மறுபடி அறைக்குள் பிரவேசித்தேன். ஓ! அவரைக் காணவில்லை. நான் அங்கேயே வெகுநேரம் பின்னர் காத்திருந்தும் பயனில்லை, அவர் வரவில்லை. “அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்காமல் ஓடியது எத்தகைய முட்டாள்தனம்” என்று நான் என்னையே கடிந்து கொண்டேன். எத்தனை எத்தனை துறவிகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் அந்த முகம் போல ஓர் அசாதாராணமான ஒன்றைக் கண்டதேயில்லை. அப்படி என் மனதில் அழியாத வண்ணம் பொதிந்திருக்கிறது அந்த முகம். ஒருவேளை இது பிரமையாக இருந்திருக்கலாம். ஆனால் நான் புத்த பெருமானைக் காணும் பெரும் பேற்றைத் தான் அன்றைய தினம் அடைந்தேன் என்று அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன்.