பார்வையாளனாய் இரு!


இது ஒரு மென்மையான, தெளிவான உண்மை. புரிந்துகொள்ளுங்கள்.  “இறைவன் நம்மை எல்லாம் ஏமாற்றுகிறான்”.  எப்படி? 

ஆதற்கு முன் ஒரு சிந்தனையை பார்ப்போம்! இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான்.  ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.  அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான்! அது என்ன? மறுபடியும் அனைத்தையும் ஒன்று சேர்த்து பழைய உருவுக்கு திரும்பவா இல்லை அனைத்தையும் கரைத்து வெற்றிடத்தில் மறைந்திடலமா? என்பதே.  எப்படிப்பட்ட வித்தியாசமான சிந்தனை இது என்று பாருங்கள்? 

சரி!  இதின் உட்கருத்தை பார்ப்போம்!

  • தன்னை சிதற அடித்தபோது, சிதறிய சின்ன துகள் நாம் .  இறைவனின் அங்கமாக இருந்தோம், ஆதலால் நாமும் இறைவன் தான். துகளாக சுற்றி திரிந்தாலும் இறைவன் அம்சத்துடன் தான் உள்ளோம்.
  • இறைவன் மறுபடியும் ஒன்று சேர நினைத்தால் இறைவனுடன் ஒன்றி கலந்து இறையாகவே மாறிவிடுவோம்.
  • இறைவன், வெட்டவெளியில் கரைந்துபோக நினைத்தால் அப்பொழுதும் இறையுடன் கலந்து அவன் நினைத்த உருவாக மாறிவிடுவோம்.
  • எந்த விதமான தீர்மானம் இறை எடுத்தாலும், நாம் இறைவனுடன் தான் கலக்கபோகிறோம்.  அது உண்மை!
சரி!  இனி விஷயத்துக்கு வருவோம்.  சிதறிய துகள்களுக்கு நுண் அறிவை கொடுத்து, அது  வரையில் காலத்தை கடக்க நமக்கு வழங்கப்பட்டதே வாழ்க்கை.  கர்மா, சொந்தம், பந்தம், அதிசயம், ஆச்சர்யம் போன்ற “கொக்கிகளை” இட்டு நம்மை கட்டிப்போட்டு நம் கவனத்தை அவனிடமிருந்து திசை திருப்புகிறான்.  அவன் இருப்பை உணர்ந்து, மேல் சொன்னவை அனைத்தும் தூசு என்று தீர்மானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை வழங்கி அவன் அருகில் இடம் கொடுத்துதான் ஆகவேண்டும்.  அத்தனை பேருக்கும் இடம் கொடுத்துவிட்டால் அவன் தீர்மானித்த நாடகத்தை யார் நடத்துவது?  இதை வெற்றிகரமாக நடத்திட வேண்டித்தான் நமக்கு ஆசைகளை கொடுத்து, வாசனைகளை உ

மெய்வருத்தக் கூலி தரும்!


அனைவருக்கும் வணக்கம்!

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி
மெய்வருத்தக் கூலி தரும்.

இது வள்ளுவர் வாக்கு!  ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாதா?  நிச்சயமாக தர முடியும்.

முக்தி அல்லது மோட்சம்!  ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது.  இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும்.  அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.  இவ்வாறு மெய்யை வருதுவதற்கே தவம் அல்லது த்யானம் என்று பெயர்.  அதை பழகுவதற்கு குரு துணை அல்லது வழிநடத்தல் வேண்டி வரும்.

புண்ணாக்கு சித்தர் சொல்வதைக் கேட்ப்போம்.

காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்
காட்டும் குரு இல்லாமல் 
ஞானம் கண்டறியலாகாதே! 

நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?

மிக எளிய பதில் – நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்!

முதலில் வாக்கு சுத்தத்தில் தொடங்குவோம்! அது என்ன? நம் வார்த்தையை நாமே மதித்தல். தலையே போவதாக இருந்தாலும் சொன்ன, சத்தியம் செய்து கொடுத்த வார்த்தையை மீறாமல் இருத்தல்.  இது எல்லாராலும் முடியும். வார்த்தையே வாழ்க்கை என நினைத்து நடக்கலாம்.  கண்டிப்பாக நல்லது நடக்கும். பெரியவர்கள் வருவார்கள், வந்து தான் ஆக வேண்டும்.